ஆதரவு
facebookTwittergoogleplusyoutube
Select Language: தமிழ் English
  • முகப்பு
  • திட்டம் பற்றி
    • சமூகத்தின் அன்பளிப்பு
    • நூல்களுக்கான குறிப்புரை
    • மெய்ப்புப் பார்த்தல்
    • எதிர்காலப் பயன்பாடு
    • தொழில்நுட்பத்தின் பங்கு
    • வளங்கள்
    • சமூக நிகழ்வுகள்
  • குழுக்கள்
  • தொகுப்புகள்
    • உரைகள்
    • வானொலி தொகுப்புகள்
    • காணொளி தொகுப்புகள்
    • செய்தித்தாள் தொகுப்புகள்
    • புகைப்பட தொகுப்புகள்
  • த.மி.தி. நிதி

    நன்கொடையாளர்கள் பட்டியல்

    • அமைப்புகள்
    • தனிநபர் - பெரியோர்
    • தனிநபர் - மாணவர்
  • கேள்வி-பதில்
  • தொடர்பு
தமிழ் மின்மரபுடைமைத் திட்டம்

சிங்கப்பூரின் 50வது ஆண்டு சுதந்திர விழாவை முன்னிட்டு, 1965முதல் 2015வரையில் பதிப்பிக்கப்பட்ட மின்வடிவமாக்கப்பட்ட சுமார் 350 சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய நூல்களின் தொகுப்பு, இந்திய சமூகத்தின் அன்பளிப்பாக நம் நாட்டிற்கு வழங்கப்பட்டது. புதினங்கள், கவிதைகள் மற்றும் சிறுகதைகளை உள்ளடக்கிய, இந்த 50 ஆண்டு கால சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத்தை எப்போதும் எங்கிருந்து வேண்டுமானாலும், நூலகங்களிலும், தேசிய நூலக வாரியத்தின் BookSG  இணையத்தளத்திலும் பொதுமக்கள் காணலாம்.

 

சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத்தைக் கட்டிக் காக்கும் ஆவல்கொண்ட தனிமனிதர்கள் சிலர் அடங்கிய ‘தமிழ் மின்மரபுடைமைத் திட்டக் குழு’வும் தேசிய நூலக வாரியமும் இத்திட்டம் 2013ல் தொடங்கப்பட்டது முதல் வழிநடத்தி வந்தன. தமிழ் எழுத்தாளர்களும் சமூக நிறுவனங்களும் மேலும் தேசிய மரபுடைமைக் கழகம், தேசியக் கலைகள் மன்றம், சிங்கப்பூர்ப் புத்தக வளர்ச்சி மன்றம் ஆகிய அரசுசார்ந்த அமைப்புகளும் இந்த முன்னோடித் திட்டத்தை வரவேற்று ஆதரவு வழங்கின.

 

இவ்வாண்டு ஆகஸ்டு 22ம் தேதி, துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான திரு தர்மன் சண்முகரத்தினம் தமிழ் மின்மரபுடைமைத் தொகுப்பை தேசிய நூலகக் கட்டிடத்தில் உள்ள நாடக அரங்கில் தொடக்கி வைத்தார். அவருடன், இத்திட்டத்தின் புரவலரும், பிரதமர் அலுவலக அமைச்சரும், உள்துறை, மற்றும் வர்த்தக, தொழில் அமைச்சுகளுக்கான இரண்டாம் அமைச்சருமான திரு எஸ் ஈஸ்வரன் கலந்து சிறப்பித்தார்.

 
தமிழ் மின்மரபுடைமைத் திட்டம்

குழுக்கள்

சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத்தைக் கட்டிக் காக்கும் ஆவல்கொண்ட தனிமனிதர்கள் சிலர் அடங்கிய ‘தமிழ் மின்மரபுடைமைத் திட்டக் குழு’ இத்திட்டத்தை வழிநடத்துகிறது.

மேலும் விவரங்களுக்கு

த.மி.தி. நிதி

தமிழ் மின்மரபுடைமைத் திட்டத்திற்கு நன்கொடை திரட்டுவதற்காக தமிழ் மின்மரபுடைமைத் திட்ட (த.மி.தி) நிதி தொடங்கப்பட்டு சிறப்பு கொடையாளர்கள், அமைப்புகள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் நன்கொடை அளித்தனர். த.மி.தி குழுவின் சார்பில் நிதியை நிர்வகிக்க தேசிய நூலக வாரியம் உதவும். த.மி.தி குழுவின் ஆலோசனைக்கிணங்க இந்நிதி பயன்படுத்தப்படும்.

எவ்வாறு நன்கொடை வழங்கமுடியும்?

www.singaporetamil2015.sg

சிங்கப்பூர்த் தமிழ் 2015 திட்டம், .
செய்திகள்
06பிப்ரவரி
2016
சிங்கப்பூர்த் தமிழர்களின் 200 ஆண்டு வரலாறு, முன்னோடி நூல் உருவாக்கத் திட்டம்
22ஆகஸ்ட்
2015
த.மி.தி தொடக்க விழா: திரு எஸ் ஈஸ்வரன், அமைச்சர், பிரதமர் அலுவலகம்
22ஆகஸ்ட்
2015
த.மி.தி தொடக்க விழா: திரு அருண் மகிழ்நன், தலைமை ஒருங்கிணைப்பாளர், தமிழ் மின்மரபுடைமைத் திட்டம்
22ஆகஸ்ட்
2015
த.மி.தி தொடக்க விழா: திரு நா ஆண்டியப்பன், தலைவர், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்
 
செய்தித்தாள்

தமிழ்முரசு

Audio Gallery Video Gallery
பதிவுசெய்யவும்
 
புகைப்படங்கள்
மேலும் பார்க்க
முக்கிய இணைப்புகள்
முகப்பு | திட்டம் பற்றி | குழுக்கள் | தொகுப்புகள் | த.மி.தி. நிதி | கேள்வி-பதில் | தொடர்பு
FacebookTwitterGoogle PlusYou Tube
பதிப்புரிமை © 2015 தமிழ் மின்மரபுடைமைத் திட்டம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
Powered by Xsosys